இலங்கை  கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஜெப்ரி வன்டர்சேவுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட  போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் போது ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு வருடாந்த ஒப்பந்த தொகையில் 20 சதவீத அபராதமும் ஒரு வருடத்திற்கான ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.