(இரோஷா வேலு) 

தேசிய அரசாங்கத்தை பல்வேறு வகையிலும் விமர்சித்த ஊடகங்கள் தெற்காசியாவிலேயே முதல் முறையாக உயர்த்தர தொழில் கல்வியில் பாரிய மாற்றத்தை கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தமை வரவேற்கத்தக்க விடயமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற 1150 தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

13 வருடங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உயர்தர தொழிற் பாடங்களை கற்பிப்பதற்கான பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்து கொள்வதற்கான நியமனம் இன்று ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆட்சியின் கீழ் இடம்பெறுகின்றது. 

இதற்கு தேசிய அரசாங்கத்தை பல்வேறு வழிகளில் விமர்சிக்கும் ஊடகங்களுக்கு தமது பங்களிப்பை வழங்குவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். 

ஆனால் இன்று இதற்கு முற்றுபுள்ளி வைத்து தெற்காசியாவிலேயே முதல் முறையாக உயர்தர தொழிற் பாடங்களுக்காக கல்வியை பாடசாலைகளுக்குள் உட்புகுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் ஏனைய பாடங்களின் தேர்ச்சி பெறாவிடினும் தொழில் கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைப்பதோடு, மாணவர்கள் தங்கள் திறமைக்கேற்ற தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ளவும் முடியும். 

இது இலங்கையில் காணப்படும் வேலையில்லாப் பிரச்சினைக்கும் முற்றுபுள்ளியாவதோடு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதத்தை வழங்கும் என்றார்.