எம்மை  விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்;சி, வி

Published By: Digital Desk 4

20 Jul, 2018 | 06:55 PM
image

எமது உரிமைகளையும்,  நிலங்களையும் பறித்து வைத்துக்கொண்டு எமது உரித்துக்களை எம்மிடம் தராது எம்மை விலைகொடுத்து வாங்கப் பார்க்கின்றார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

509 ஆவது நாளாக கேப்பாபுலவில்  இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு  கோரி போராடடத்தில் ஈடுபட்டு வரும் மக்களை இன்றையதினம்  சந்தித்து அவர்களுக்கான உதவிப்பொருட்களை வழங்கி வைத்து அவர்களிடம்  கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

உங்களுடைய நிலங்களை பெற்றுத்தரவேண்டும் என்று நாங்கள் உறுதியாகத்தான் இருக்கின்றோம். ஆனால் எப்படியாவது உங்களுடைய காணிகளை திருப்பி தராது இருக்கவேண்டும்  என்ற எண்ணத்தில்  இந்த அரசாங்கம் இருக்கும் நிலையில் இதுவரையில் எமக்கு வெற்றி கிட்டவில்லை ஆனால் உங்களுடைய பிரச்சினையை  உலகறிய செய்திருக்கின்றோம்.

உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை குறைக்கும் எண்ணத்திலேதான் சிறு உதவிப்பொருட்களை இன்று கொண்டுவந்திருக்கின்றோம் முக்கியமாக குழந்தைகளுக்காக இந்த உதவிப்பொருட்களை கொண்டு வந்திருக்கின்றோம். பாடசாலைகளுக்கு போய்வர இருக்கும் சிரமங்களை  போக்கும் நோக்கில் சைக்கிள்கள் பாடசாலை உபகரணங்களை கொண்டுவந்திருக்கின்றோம். ஆனால் இந்த உதவிப்பொருட்கள்  உங்களுடைய அடிப்படை பிரச்சினையை போக்கும் என்று இல்லை ஆனால் உங்களுக்கு இருக்கும் சிரமங்களை குறைக்க உதவும் என எண்ணுகின்றோம்.

திரும்பவும் உங்களுடைய காணிக்குள் நீங்கள் பலாத்காரமாக போவதற்கு தீர்மானித்துள்ளீர்கள்  இது சம்பந்தமாக எல்லோருடனும் பேசி ஒரு முக்கியமான முடிவுகளை எடுப்பதாக கூறித்தான்  இவ்வாறு செய்யவேண்டும். இவாறு நீங்கள் செய்வதால் இராணுவம் எந்தவிதமான   நடவடிக்கையை எடுப்பார்கள் என கூறமுடியாது . விரைவிலே உங்களின் பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

இந்த பிரச்சனைகளை பார்த்தால் இலங்கையில் தமிழ் மக்களுக்கு காலாகாலம் இருக்கும் பிரச்சினைகள் போலத்தான் இதுவும் தரவேண்டிய காணிகளை விடுவிக்காமல் வைத்துக்கொண்டு அதை எடுங்கள் இதை எடுங்கள் என்றுதான் கூறிக்கொண்டு இருக்கிறார்களே தவிர எமக்கு தேவையான எமக்கு உரித்துடைய எமது பழம்பெரும் காணிகளை நாம் பலகாலமாக பாதுகாத்துவந்த காணிகளை பிடித்துவைத்துக்கொண்டு தர மறுக்கின்றார்கள். இதேபோலத்தான் தமிழ் மக்களின்பிரச்சினைகளை காலாகாலம் தீர்த்துவைக்காது அவர்களுடைய அரசியல் ரீதியான உரிமைகளை தீர்வுக்களை  பெற்றுக்கொடுக்காது அதைத்தருகின்றோம் இதைத்தருகின்றோம் கொஞ்சம் குறைத்து தருகின்றோம் என்று பேரம்பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

அதாவது உங்களுடையக் காணி உங்களுக்கு தரவேண்டிய காணிகளை பிடுத்து வைத்துக்கொண்டு தராது மறுக்கின்றார்கள் .அதேபோலத்தான் வடக்கு கிழக்கு ஆயிரமாயிரம் வருடங்களாக தமிழ் மக்களுடையது அந்த நிலங்களை பறித்து வைத்துக்கொண்டு அது சம்பந்தமான உரிமைகளை பறித்து வைத்துக்கொண்டு பேரம் பேசி எம்மை பணம் கொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்.

 உங்கள் உரித்துக்களை நீங்கள் விட்டுக்கொடுக்காது போராடி வருகிண்றீர்கள் அதை நாம் வரவேற்கின்றோம் அதேபோலத்தான் தமிழ் மக்களும் தமது உரித்துகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.அந்த உரித்துக்கள் கிடைக்கும் வரை நாம் குரல்கொடுத்து கொண்டிருப்போம் .என தெரிவித்தார்.

போராடடத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்குமான சைக்கிள்கள் பாடசாலை உபகரணங்கள் ,உடுப்புடவைகள் போன்றன முதலமைச்சரால் இன்றையதினம் குறித்த மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01