ஒரு சிலர் தற்போது வீட்டில் இருக்கும் போதும் ஏசி. வீட்டை விட்டு புறப்பட்டு காரில் ஏறி உட்கார்ந்து பயணிக்கும் போது ஏசி. அலுவலகத்திலோ அல்லது வணிக வளாகத் திலோ இறங்கி பணியாற்றும் இடமும் ஏசி. அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு திரும்பும் போது ஏசி. வீட்டிற்கு வந்தவுடன் மீண்டும் எசி... இப்படி ஏசியிலேயே வாழ்க்கையை வாழ்பவர்களாக நீங்கள் இருந்தால். உங்க ளுக்கு மனதில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் இருக்கலாம்.

ஆனால் உங்கள் உடலில் உள்ள எலும்பு கள் பலவீனமாகத் தொடங்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் உங்களின் எலும்புகளுக்கு தேவையான விற்ற மின் டி சத்தினை ஏற்க மறுக்கிறீர்கள். அத்துடன் கால்சியம் சத்து அதிகமுள்ள உணவையும் சாப்பிட மறுக்கிறீர்கள். இதனால் எலும்புகள் நாளடைவில் பலவீனமடையக்கூடும்.

வேறு சிலர் எப்போதும் குளிர்சாதன வசதி யுடன் கூடிய அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பார்கள்.

வேறு சிலர் வெளியில் செல்லும் போது இயல்பை விட அதிகளவிற்கு சன் ஸ்கீரினைப் பயன்படுத்துவார்கள். வேறு சிலர் கால்சியம் சத்துமிக்க உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்வார்கள். வேறு சிலர் விற்றமின் டி மற்றும் ஏனைய விற்றமின் சத்து இல்லாத காய்கறிகளை பயன்படுத்துவார்கள். வேறு சிலர் பனிப்பொழிவு அதிகமுள்ள இடங்களில் வசிக்கவிரும்புவர். இவர்களுக்கு எல்லாம் நாளடைவில் எலும்புகள் பலவீனமடைந்து நிற்கக் கூட சக்தியற்று இருப்பர்.

இதனை களையவேண்டும் எனில், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் முப்பது நிமிட மாவது வெயிலில் உலாவ வேண்டும் அல்லது வெயில் எம்முடைய உடல் மீது பட வேண்டும்.

அத்துடன் ஒரு லீற்றர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு எமக்கு அன்றாடம் தேவை. இதை மனதில் வைத்து சாப்பிடவேண்டும். மாமிச உணவுகளில் கால் சியம் சத்து அதிகமாக இருக்கிறது. இதனை பயன்படுத்தலாம்.

விற்றமின் டி சத்து குறைவாக இருந்தால், முதலில் சுவாசக் கோளாறு ஏற்படத் தொடங் கும். இது நாளடைவில் புற்று நோயாகவோ அல்லது காச நோயாகவோ மாறக்கூடும். விற்றமின் டி சத்து இருந்தால் இவை கால்சியம் சத்தினை கட்டுப்படுத்தி, மேற்கண்ட இரண்டு பாதிப்பினையும் வர விடாமல் தடுக்கும்.

எனவே நீங்கள் ஏசியிலேயே இருந்தாலும், தினசரி முப்பது நிமிடத்திற்காகவது உங்கள் உடல் மீது வெயில் படுமாறு செயல் பட வேண்டும். இதன் மூலம் உடல் தனக்கு தேவையான விற்றமின் = டி சத்தினை சூரிய ஒளியிலிருந்து கிரகித்துக் கொள்ளும். உங்க ளையும் காப்பாற்றும்.

டாக்டர். மிஸ்ரா

தொகுப்பு: அனுஷா