தந்தையின் மரண சடங்கிற்காக 13 வருடங்களின் பின்னர் வெளியில் வந்த அரசியல் கைதி

Published By: Digital Desk 4

20 Jul, 2018 | 06:09 PM
image

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் இன்று அவரது தந்தையின் இறுதி சடங்கில்  கலந்துகொண்டார். 

கடந்த 18 ஆம் திகதியன்று இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல் என்ற சிவகுமாரின் தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணிநேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 

இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொள்வதற்காக அரசியல் கைதியான சிவகுமார் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டார். 3 பிள்ளைகளின் தந்தையான இவர் 13 வருடங்களாக சந்தேக நபராக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். 

2006 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு கரந்தெனியா பகுதியில் வாகனத்துடன் சந்தேகத்தின்பேரில்  கைது செய்யப்பட்ட இவர் பொறள்ள பகுதியில் அமைந்துள்ள நியூ மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதியாக உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். 

நீண்ட காலமாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக பலப்பிட்டி உயர்நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாக அவரது மனைவி சுமதி தெரிவிக்கின்றார். 

இந்த நிலையில் சிவகுமாரிற்கு வழங்கப்பட்ட ஒருமணிநேர காலம் நிறைவடைந்ததும் அவரை சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்து சென்றபோது உறவினர்கள் அவரை கட்டிதழுவினர். 13 வருடங்களாக அவரை பிரிந்திருந்த ஆதங்கத்தில் மனைவியும், பிள்ளைகளும் சிவகுமாரை தழுவி கண்ணீர் விட்டழும் காட்சிகள் கிளிநொச்சி மண்ணை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியது. 

சிவகுமார் சிறைச்சாலை பேருந்தில் ஏறும் காட்சியை கண்ட பிள்ளைகள் கதறி அழுதனர். சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சிவகுமரின் கண்களிலிருந்து நீர் வழிய அவர் பேருந்திலிருந்து கையசைத்தபோது அவரது பிள்ளைகளும், உறவினர்களும் வேதனையில் துடித்த காட்சிகள் துக்கத்தை அதிகரித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53