மாகாண அமைச்சரவை விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது-சர்வேஸ்வரன்

Published By: Rajeeban

20 Jul, 2018 | 04:51 PM
image

வடக்குமாகாண ஆளுநர் மாகாண அமைச்சரவையை  கூட்டக்கூடாது என கூறியிருக்கின்றார். இவ்விடையம் சட்ட ரீதியானதே ஆனால் இப் பிரச்சினையைப் பார்க்கும்போது  இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கின்றதா என்ற சந்தேகம்  எழுகின்றது என  வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண அமைச்சரவையை  நடாத்தக்கூடாது என  வடமாகாண ஆளுநர்   உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோதே  அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

வடக்குமாகாண ஆளுநர் மாகாண அமைச்சரவையை கூட்டக்கூடாது  என கூறியிருக்கின்றார்.

காரணம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கொடுத்த இடைக்காலத் தீர்ப்புக் காரணமாக, இந்த இடைக்காலத் தீர்ப்பு என்பது அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட டெனீஸ்வரன் நீக்கப்பட்டதற்கான  வர்தகமானி அறிவித்தல் ஆளுநர் வெளியிட தவறிவிட்டார் என்பதற்காக அவர் அமைச்சராகவே இருக்கின்றார் என்ற நிலைப்பாட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் எடுத்திருக்கின்றது.

ஆகவே எங்களுடைய அரசியல் அமைப்பின் பிரகாரம் ஒரு மாகாணத்தில் 5 அமைச்சர்கள் தான் இருக்கலாம் ஆனால் வர்த்தமானி அறிவித்தலை  மாகாண ஆளுநர் விடுவிக்கத் தவறியதால் இத்தகைய தீர்ப்பு வெளிவந்திருக்கின்றது.

எனவே இதனைத் தீர்ப்பதற்கு ஆளுநரே ஒரு குறிப்பிட்ட ஒரு திகதியைப் பயன்படுத்தி அமைச்சுப் பதவி வலுவிலந்துள்ளது என்பதனை வர்த்தமானி அறிவித்தலை  தற்போதும் விடலாம் . ஆனால் அதனைச் செய்யாது இழுத்தடிப்பது அரசியல் உள்நோக்கம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

காரணம் இவற்றையெல்லாம் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் ஒரு அமைச்சரை நியமிப்பதும் நீக்குவதற்குமான அதிகாரம் ஆளுநரைச் சார்ந்தது. இதனுடைய உண்மையான அர்த்தம் என்னவெனில் ஒரு முதலமைச்சர் அமைச்சரை பரிந்துரை செய்யலாம்.  ஆனால் அமைச்சரை நியமிப்பது கையொழுத்திடுவது ஆளுநர் சம்பந்தப்பட்ட விடயம். அதேபோன்று ஒருவருக்கு பதிலாக மற்றறொருவரை நியமிக்கின்றோம் என்னும் போது ஒருவர் நீக்கப்படுகின்றார். இங்கு நீக்குவது என்பதையும் வர்த்தமானி மூலம் அறிவிக்கும் பொறுப்பு ஆளுநர் அலுவலகத்தையே சார்ந்தது .அது முதலமைச்சரை சார்ந்தது அல்ல ஆகவே முதலமைச்சர் மீது எந்தத் தவறும் கிடையாது.

ஆளுநர் தனது கடமையை செய்யத் தவறியதன் காரணமாகத்தான் அது சபைக்கு் கொண்டு வரப்பட்டு முதல்வரின் பிரச்சினையாக தவறாக பிரச்சாரம் செய்யும் களமாக மாற்றப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15