நாட்டின் நலனுக்காகவும் சுபீட்சத்துக்காகவும் ஒன்றிணைந்து பாடுபடும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான இலங்கை மக்களினதும் அரசாங்கத்தினதும் முயற்சிகளில் பங்காளராக இணைந்து கொள்வதில் யு.எஸ்.எயிட்  பெருமைப்படுகிறதென அவ் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் ரீட் ஏய்சிலிமன் தெரிவித்தார்.

இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளில் உள்ளுர் சமூகங்களை இணைப்பதற்காக சர்வதேச சமூகத்தினரை ஈடுபடுத்தும் நோக்கில் சர்வதேச அபிவிருத்திதிக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) நிதியுதவியினை நன்னொடையாக வழங்கியுள்ளது.

குறித்த அமைப்பானது 1.6 பில்லியன் இலங்கை ரூபாவினை (10,000,000 அமெரிக்க டொலர்கள்) நன்கொடை உதவியாக கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி வழங்கியிருந்தது. 

மூன்று வருட முயற்சியானது நல்லிணக்கத்திற்கு சவாலாக உள்ள விடயங்களிற்கு தீர்வை காண்பதில் இலங்கை அரசாங்கத்துடனும் உள்ளுர் சிவில் சமூகத்துடனும் இணைந்து பணியாற்றுவதாக அமைந்திருக்கும். 

இந்த திட்டம் பகிரப்பட்ட அனைவரையும் உள்வாங்கிய இலங்கை அடையாளத்தை ஊக்குவித்தல், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல், மற்றும் பல்லின மற்றும் பல் மத சமூகங்களிற்கு மத்தியில் மீள்எழுச்சியை வலுப்படுத்துதல் போன்றவற்றை ஊக்குவிக்கும்.

“நாட்டின் நலனுக்காகவும் சுபீட்சத்துக்காகவும் ஒன்றிணைந்து பாடுபடும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான இலங்கை மக்களினதும் அரசாங்கத்தினதும் முயற்சிகளில் பங்காளராக இணைந்து கொள்வதில் யு.எஸ்.எயிட்  பெருமைபடுகிறது,” என்று யு.எஸ்.எயிட்  இன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் ரீட் ஏய்சிலிமன் தெரிவித்தார்.

உள்ளுர் சமூகங்கள் மத்தியில் குடிமக்கள் சார்ந்த முயற்சிகள் மற்றும் வலையமைப்புகளை விஸ்தரிப்பதாகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்குவதாகவும் செயற்பாடுகள் அமைந்திருக்கும். தேவைப்பாடுடையோருக்கு முக்கிய சேவைகளை வழங்கும் மற்றும் உளவியல் சமூக சேவைகளுக்கான அணுகலை அதிகரிக்கும் உள்ளுராட்சி மற்றும் சமூகம் சார் அமைப்புகளையும் அவை வலுப்படுத்தும். மேலும், பொறுப்பான குடியுரிமையையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதில் சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதற்கு இளைஞர், பெண்களுக்கான வாய்ப்புகளையும் இந்த திட்டம் அதிகரிக்கும்.

யு.எஸ்.எயிட்  இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் 60 இற்கும் மேற்பட்ட வருடங்களாக அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கிவருகின்றது.