‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ 

Published By: Daya

20 Jul, 2018 | 04:45 PM
image

ரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

ரம்யா நம்பீசன் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கவின் கதாநாயகனாக வருகிறார். ஷிவகுமார் அரவிந்த் தயாரித்துள்ளார். 

குறித்த படம் இம்மாதம் 27ஆம் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தை எதிர்த்து திரைப்பட வினியோகஸ்தர் மலேசியா பாண்டியன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

‘‘நட்புன்னா என்னன்னு தெரியுமா” படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தரிடம் இருந்து வாங்கினேன். இதற்காக  8 லட்சம் ரூபா அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் போட்டேன். அதன்பிறகும் பல கட்டங்களாக பணம் கொடுத்தேன். மொத்தம் 25 லட்சத்து 20 ஆயிரம் வழங்கி இருக்கிறேன். 

ஆனால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் பொலிஸாருக்கு புகார் செய்தேன் .பணத்தை தராமல் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்’’

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 

இதைத்தொடர்ந்து ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19