வர்த்தக தகவல் மையம் நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் - ரிஷாத்

Published By: Vishnu

20 Jul, 2018 | 04:06 PM
image

(நா.தனுஜா)

வர்த்தக ரீதியான தகவல்கள் பதிவேற்றப்பட்ட இணையத்தளத்தினூடாக எதிர்காலத்தில் அடைய எதிர்பார்த்துள்ள நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கி விரைந்து பயணிக்க முடியும் என கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.

வர்த்தக ரீதியான தகவல்கள் பதிவேற்றப்பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வர்த்தக ரீதியான உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் அடங்கிய இணையத்தளம் இலங்கையில் ஆரம்பிக்கப்படுவது வர்த்தக ரீதியாக முக்கியமானதொரு நிகழ்வாகும். இது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு உதவியாக அமையும் என்பதுடன் பூகோளமயமாக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகவும் அமையும்.

தகவல்களை திரட்டுவதில் ஏற்படும் தாமதத்தின் காரணமாக ஏற்படும் வர்த்தக முதலீட்டுத்தடைகளை இவ்வாறானதொரு தகவல் தளத்தின் மூலமாக வெற்றிகொள்ள முடியும். அதேபோல் பொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பிலும் கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 

மேலும் தற்போது இலங்கையின் மரக்கறி மற்றும் பழவகைகளின் ஏற்றுமதி மூலம் பெருமளவான வருமானம் பெறப்படுகின்றது. எமது ஏற்றுமதி தொடர்பில் சர்வதேச ரீதியில் கேள்வி ஏற்பட்டுவரும் நிலையில் வரத்தகம்சார் தகவல்கள் அடங்கிய இணையத்தளம் மேலும் பயனுடையதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் அமையும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47