புகழ்பெற்ற ஓவியரான கோர்னர் கொலின்ஸ் பிரித்தானிய இளவரசி டயானாவின் படம் ஒன்றை எச்.ஐ.வி இரத்தம் மற்றும் வைர துகள்களை பயன்படுத்தி வரைந்துள்ளார்.

1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரித்தானிய இளவரசி டயானா ஹெச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் கை குலுக்கி உலகம் எச்.ஐ.வி குறித்து கொண்டிருந்த தவறான எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி  வைத்தார்.

இச் சம்பவத்தை நினைவு கூறும் முகமாக கோர்னர் கொலின்ஸ் வரைந்த இந்த படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

"டயானா எச்.ஐ.வி  நோய்த்தொற்றிய ஒரு மனிதனின் கைகளைப் பற்றிக் கொண்டதைக் கண்டு உலகம் அன்று அதிர்ந்தது, என்றாலும் எச்.ஐ.வி  குறித்த தவறான எண்ணம் இன்னும் மாறவில்லை" என்கிறார் கோர்னர் கொலின்ஸ்