அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு  ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் ஊடக செயலாளர் சரா சாண்டெர்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் புட்டினை அமெரிக்காவிற்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு  டிரம்ப் கோரியுள்ளார் என  சராசண்டெர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  சமீபத்தைய சந்திப்பின் போதுஆராயப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக புட்டினை மீண்டும் சந்திப்பது குறித்து ஆர்வமாக உள்ளேன் என  டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க விஜயத்திற்கான அழைப்பு உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.