ஒரு சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்படும். அதையே வேறு சிலர் தலை கிறுகிறுத்தது என்பர். உடனே எம்மை அணுகி இரண்டும் ஒன்றா? என கேட்பர். இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றால், இரண்டு வேறு வேறு. அதாவது தலைச்சுற்றல் என்பது வேறு. தலை கிறுகிறுப்பது என்பது வேறு. இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஒரு சிலருக்கு உட்கார்ந்திருப்பார்கள். எழுந்திருக்கும் போது அரை நொடிக்கு குறைவான கால அவகாசத்தில் சர்ரென்று தலை சுற்றியடிக்கும். அதன் பின் அவை சரியாகிவிடும். எந்த விளைவோ தொடர் பாதிப்போ இருக்காது.

ஆனால் ஒரு சிலருக்கு அடிக்கடி தலைச் சுற்றல் வரும். சில சமயத்தில் இது தொடர்ந்து வரக்கூடும். இப்படி ஏற்பட்டால், முதுகு தண்டுவடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நரம்புகள், எலும்பு பகுதி பாதிக்கப்படும் அள விற்கு ஒரு எரிச்சலும் ஏற்படும். இதனை தலைச்சுற்றல் என்று எண்ணி அலட்சியமாக இருந்துவிடாதீர். ஏனெனில் இவை தான் வெர்டிகோ பிரச்சினை.

இப்பிரச்சினை உள்ளவர்களுக்கு தலைச் சுற்றலும் கிறுகிறுப்பும் ஒன்று மாதிரியே தோன்றும். ஆனால் இவை வெர்டிகோ பிரச்சினை என்று தெரிந்துகொள்ளுங்கள். மூளை நரம்பு மண்டலத்தில் இருந்து இதன் பாதிப்பு தொடங்குகிறது. அதிகபட்சமாக இது இதயக்கோளாறை உருவாக்கிவிடுகிறது. அதனால் தான் தலைச்சுற்றல் சாதாரணமாக இருந்தாலும், விட்டுவிட்டு வந்தாலும், தலை கிறுகிறுப்பு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற் றுக்கொள்ளவேண்டும்.

அலட்சியப்படுத்தினால் வெர்டிகோ தான். இப்பிரச்சினையானது பாதிக்கப்பட்டவர்களை தூங்கவிடாது. தூக்கமின்மையை ஏற்படுத்தி விடும். அத்துடன் தலைச்சுற்றலுடன் வாந்தி யையும் குமட்டலையும் ஏற்படுத்தும். ஒரு சிலர் இதற்காக உடனடியான மருத்துவர் களை சந்தித்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு நிவாரணம் காண்பர். ஒரு சிலருக்கு இத்தகைய பாதிப்பின் போது மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் வீரியம் குறையுமே தவிர பாதிப்பு குணமடையாது. அதிலும் கோடை காலம் என்றால் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். அத்தகைய காலகட்டங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மருத்துவர்களின் அறிவுரையின் படி நடக்கவேண்டும்.

இப்பிரச்சினை உள்ளவர்கள் கோப்பி, சொக்

லேட் உள்ளிட்ட அதிக இனிப்புள்ள பொருட் களை சாப்பிடவே கூடாது. அதே போல் மதுவை முற்றாகத் தவிர்க்கவேண்டும். நரம்பு மண்டல பிரச்சினை என்பதால் இதனை அலட் சியப்படுத்தினால் மூளையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும்.

அடிக்கடி கண்வலி, கண்கள் தெளி வின்மை, நாக்குற பேசுதல், காது மந்த மாதல் போன்றவை வெர்டிக்கோவின் சில பொதுவான அறிகுறிகள்.

அதே போல வேறு சிலருக்கு கை கால் பலவீனம், நடந்து கொண்டிருக்கும் போது அடிக்கடி மயக்கம், குமட்டல் ஆகியவையும் ஏற்படக்கூடும். இவையும் வெர்டிகோவிற்கான அறிகுறிகளே.

இந்த அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்து வர்களை சந்தித்து முறையாக பரிசோதித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லையெனில் இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்பட்டு, இதயத்தில் வலி ஏற்படும். அதனால் தலைச்சுற்றலை அலட்சியப்படுத்தாதீர்.

டாக்டர். குணசேகரன்

தொகுப்பு: அனுஷா