இயக்குநருக்கு நெத்தியடி கொடுத்த நடிகை அஞ்சலி

Published By: Daya

20 Jul, 2018 | 02:32 PM
image

பிரபல ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் படத்தில் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் லிசா 3டி. இந்த ஹாரர் படத்தின் ஆக்ஸன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார்.

ஏமாலி படத்தின் நாயகன் ஷாம் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர்  திரைப்படம் லிசா. இப்படத்தின்  சண்டைக்காட்சி நேற்று படமாக்கப்பட்டபோது

3டி எஃபெக்ட்டில் தோசைக்கல்லை தூக்கி கேமரா முன் அஞ்சலி வீசவேண்டும், நடிப்பு என்றதும் எதிர்பாராத விதமாக தோசைக்கல் பறந்து வந்து கேமரா அருகில் நின்ற இயக்குனரின் நெத்தியில் பட்டு புருவம் கிழிந்தது.

இரத்தம் வழிய வலியை பொருட்படுத்தாமல் அந்த ஷாட் எப்படி வந்துள்ளது என பார்த்த இயக்குநர் 3டி பிரமாதமா வந்திருக்கு என சொல்லிவிட்டு பிறகுதான் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

நெத்தியில் தையல் போட்டு திரும்புவதற்கு நேரமாகி விட்டதால் அன்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்தப் படத்தில் பொலிவூட்டின் பிரபல நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே மிகமுக்கிய கதாப்பாத்திரத்தில் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார்.

மறைந்த நடிகர் ரகுவரனின் இடத்தை இவர் தமிழில் பிடிப்பார் என தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37