சில மாதங்களுக்கு முன் நைஜீரியா போன்ற ஆபிரிகா நாடுகளில் Lassa Fever என்ற காய்ச்சல் உருவாகி பலர் பலியாகினர். இது குறித்து உடனடியாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஏனைய உலக நாடுகள் திறமையுடன் செயற்பட்டு இதனை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன.

லாசா காய்ச்சல் லாசா வைரஸ் என்ற கிருமியினால் ஏற்படுகிறது. இது ஒரு சூனாடீக் நோய். அதாவது சுண்டெலி, எலி, வெள்ளெலி, அணில், முள்ளம்பன்றி போன்ற கொறித்து உண்ணும் விலங்குகளின் சிறுநீர் அல்லது மலம் ஆகியவற்றிலிருந்து இந்த வைரஸ் கிருமி உற்பத்தியாகி நோயாக பரவுகிறது.

அதனால் மனிதர்கள் இத்தகைய விலங்குகளிடமிருந்து சற்று எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். இவற்றிலிருந்து வெளிப்படும் சிறுநீர் அல்லது மலம் தெரியாமல் மனிதர்கள் மீது பட்டுவிட்டால் உடனே லாசா காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகிவிடுவோம்.

முதலில் லேசான காய்ச்சல், சோர்வு ஏற்படும். பிறகு தலைவலி, தொண்டை வலி, தசை வலி, மார்பு வலி, குமட்டல், வாந்தி, வயிற்று போக்கு, இருமல், அடிவயிற்று வலி, முக வீக்கம், கல்லீரலில் இருக்கும் திரவம் நிறம் மாறுவது, வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் இரத்தம் வருதல், இரத்த அழுத்தம் திடிரென்று குறைந்து கோமா நிலைக்கு சென்றுவிடுதல் போன்றவை இவற்றின் அறிகுறிகளாகும்.

இந்த நோய் வந்துவிட்டால் இதற்கான துணை சிகிச்சைகளின் மூலம் இதன் பாதிப்பை கட்டுப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த நோய் வராமல் முன்னெச்சரிக்கையாக தற்காத்துக் கொள்வது தான சிறந்தது என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.