நடிகர் சிவகார்த்திகேயன், மிஷ்கின் சுசீந்திரன், விக்ராந்த் நடிப்பில் தயாராகி வரும் ”சுட்டுப் பிடிக்க உத்தரவு” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.

இவர் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே திரையுலக பிரபலங்களும், திரை ஆர்வலர்களும் சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் சுசீந்திரனின் ரசிகர்கள் இதனை இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கிவிட்டார்கள்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ‘சுட்டு பிடிக்க உத்தரவு ’ படத்தில் இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் சுசீந்திரன், நடிகர் விக்ராந்த் ஆகியோர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீஜித் சாரங் படத்தை தொகுக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கிறார். இதனை ராம் மோகன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு நிறைவுற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இதன் டீஸர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.