இந்தியா - சத்திஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் பகுதியில்  மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக எண்ணிய கணவன் மனைவியின் பிறப்புறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மனைவிக்கு பல மாதங்களாக வேறு ஆடவர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக எண்ணிய கணவர் மனைவியிடம் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார் பல நாள் மனைவியை கொடூரமாக தாக்கியுமுள்ளார்.

இந்நிலையில் நேற்று பகல் தம்பதிகள் இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

சண்டையின் இடை நடுவே கணவரின் கதைகளுக்கு செவிசாய்க்க முடியாத மனைவி அழுக்குத் துணிகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்று துணிகளை துவைத்துக் கொண்டிருந்துள்ளார்.

குளியலறைக்கு சென்ற கணவர் மனைவியின் பின்புறமாக நின்று தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மனைவி மயங்கி விழ மின்சாரை வயரை எடுத்து மனைவியின் பிறப்புறுப்பிலும், மார்பகங்களிலும் வைத்து மின்சாரத்தை பாய்ச்ச மனைவி துடிதுடித்து இறந்துள்ளார்.

பின்னர் மனைவியின் குடும்பத்தாருக்கு தொலைப்பேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி உடல்நலக்குறைவால் மனைவி இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் சம்பவ இடத்திற்கு  வந்த போது மகள் குளியலறையில் சடலமாக இருப்பதை பார்த்து சந்தேகமடைந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததோடு கணவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் கணவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதோடு கொலை செய்த விதத்தையும் கூறியுள்ளார்.

குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.