புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்ட மதுரங்குளி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த  விபத்து இடம்பெற்றுள்ளது. இதனால் முச்சக்கர வண்டியின் சாரதிக்கும் பஸ்ஸின் சாரதிக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் பயணிகள் பலரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.