இந்திய பாராளுமன்றதில்  நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளதை பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதையடுத்து, தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடத்தப்படுகிறது. மக்களவையில் விவாதம் நடைபெற்று, அதன்பின்னர்  வாக்கெடுப்பு நடைபெறும்.

குறித்த தீர்மானத்தை தோற்கடிக்க தேவையான உறுப்பினர்கள் பலம் பா.ஜ.க.விடம் இருப்பதால் மத்திய அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் கூடுதல் எம்.பி.க்களின் ஆதரவையும் திரட்டிவருகிறது. 

பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்  தெரியவருவதாவது,

“பாராளுமன்ற ஜனநாயகத்தில் இன்று மிக முக்கியமான நாள். இன்று நடைபெறும் விவாதம் ஆக்கப்பூர்வமாகவும் விரிவாகவும் அமளியின்றியும் நடைபெறும் என நம்புகிறேன். இதற்காக,  மக்களுக்கும் அரசியல் அமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். நாடே நம்மை உற்றுநோக்கி கொண்டு இருக்கும்” என மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.