இந்­திய மாநில அணியில் இடம்­பெற வேண்­டு­மென்றால் பெண்­களை ஏற்­பாடு செய்து தர வேண்டும் என்று கூறி­ய­தாக இந்­திய உத்­த­ர­பி­ரதேச வீரர் ஒருவர் பர­ப­ரப்பு குற்­றச்­சாட்டை தெரி­வித்­துள்ளார்.

உத்­தர பிர­தேஷ் மாநில கிரிக்கெட் சங்­கத்தில் முஹ­மது அக்ரம் சைபி எந்த ஒரு பொறுப்­பிலும் இல்­லா­விட்­டாலும் இவர் அம்­மா­நில கிரிக்கெட் சங்­கத்தில் செல்­வாக்கு உள்­ள­வ­ரா­கவே இருக்­கிறார். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட் தலைவர் ராஜீவ் சுக்­லாவின் நிர்­வாக உத­வி­யா­ள­ராகவும் பி.சி.சி.ஐ.யில் சம்­பளம் பெறும் பணி­யா­ள­ராகவும் இருக்­கிறார்.

உத்­தர பிர­தேச மாநி­லத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா, தான் மாநில அணியில் விளை­யாட வேண்­டு­மானால் பெண்­களை ஏற்­பாடு செய்ய வேண்டும் என முஹ­மது அக்ரம் சைபி கேட்­ட­தாக குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். மேலும், ராகுல் சர்­மா­விடம் முஹ­மது அக்ரம் சைபி

பணம் மற்றும் வேறு வகை­யான ஏற்­பா­டு­களை செய்யக் கேட்­ட­தாகவும் தெரி­வித்­துள்ளார்.

இது கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்­பி­யுள்­ளது. இது தொடர்­பாக, இந்­தியத் தொலைக்­காட்சியொன்று ஒலி நாடா ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. 

அதில், குறிப்பிட்ட நபர் உள்­நோக்­கத்­துடன் ராகுல் சர்­மா­விடம் மாநில அணியில் விளை­யாட விருப்பம் என்றால் டெல்­லியில் உள்ள ஐந்து நட்­சத்­திர ஹோட்­ட­லுக்கு பெண்களை அனுப்பு என்று கேட்கிறார். இந்த ஒலிநாடா பெரும் சர்ச்சைப் புயலை ஏற்படுத்தியுள்ளது.