(இரோஷா வேலு) 

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த பெண்ணொருவரை நேற்று பல்லேவல பிரதேசத்தில் கைதுசெய்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 23 வயதுடைய அம்பலன்வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, கடந்த சில மாதங்களாக நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற 6 வீட்டுடைப்பு சம்பவங்களுடனும், கிரிபத்கொடை மற்றும் மீரிகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுடைப்பு சம்பவங்களுடனும் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதுடன் அவரிடமிருந்து நான்கு மடிக்கணனிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இரண்டு தங்க மோதிரங்கள் உட்பட தங்க ஆபரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

மேலும் அவரை இன்று அத்தனல்ல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நிட்டம்புவ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.