யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னார்பண்னை பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் பிரவேசித்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் காரணமாக வீட்டின் சொத்துக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.