ரஷிய, ஜப்பான் போரின்போது சுமார் 13 இலட்சம் கோடி தங்கத்துடன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ரஷிய போர்க்கப்பல், 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1905ஆம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷிய நாட்டுக்கு சொந்தமான ‘டிமிட்ரி டான்ஸ்கோய்’ என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டது. அது ரஷியாவுக்கு பேரிழப்பாக அமைந்தது.

குறித்த போர்க்கப்பலில், 189 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான (சுமார் 13 இலட்சம்  கோடி) தங்கக்கட்டிகளும், நாணயங்களும் வைக்கப்பட்டு இருந்தன. இவை 5 ஆயிரத்து 500 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த தங்க கட்டிகளும், நாணயங்களும் 2 இலட்சம் கிலோ எடை உடையதாகும்.

குறித்த கப்பலில் இருந்த சிப்பந்திகளில் 60 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும், 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மூழ்கடிக்கப்பட்டு 113 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது இந்த போர்க்கப்பல், தென் கொரியாவில் உள்ளே உங்டோ தீவு கடலில் 420 மீற்றர் ஆழத்தில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.