68250 ஹெக்­டேயர் காணியை சீனா­வுக்கு வழங்­க முடி­யாது

Published By: Vishnu

20 Jul, 2018 | 08:07 AM
image

கரும்புச் செய்­கைக்­காக சீன அர­சாங்­கத்தின் கம்­ப­னி­யொன்­றுக்கு மட்­டக்­க­ளப்பு குடும்­பி­ம­லையில் 68250 ஹெக்­டேயர் காணியை வழங்­கு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

மட்­டக்­க­ளப்பு - குடும்­பி­ம­லையில் சீன அர­சாங்கத்தின் கம்­பனி ஒன்­றுக்கு கரும்புச் செய்­கைக்கு காணி வழங்க இர­க­சிய ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை தொடர்­பாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதிபர் மா. உத­ய­கு­மா­ருக்கு புதன்­கி­ழமை அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கோற­ளைப்­பற்று தெற்கு (கிரான்), ஏறா­வூர்­பற்று (செங்­க­லடி) ஆகிய பிர­தேச செய­லாளர் பிரிவுகளை மைய­மாக கொண்­ட­தான குடும்­பி­மலை பகு­திக்கு அண்­மித்த 68250 ஹெக்­டேயர் காணியை இலங்கை அர­சாங்கம் யாருக்கும் தெரி­யாமல் சீன அர­சாங்க கம்­பனி ஒன்­றுக்கு கரும்புச் செய்­கைக்கு வழங்க இர­க­சிய ஒப்­பந்தம் ஒன்றை மேற்­கொண்­டுள்­ளது என சில ஆதா­ரங்­க­ளுடன் அறிந்­துள்ளேன்.

இதே­வேளை கரும்புச் செய்­கை­யா­னது நில வளத்தை பாதிப்­ப­துடன், எதிர்­கா­லத்தில் மக்கள் பஞ்­சத்தில் வாழ வழி­யேற்­ப­டுத்தும். 

முன்னர் சிங்­கள பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்ட கரும்புச் செய்கை நிறுத்­தப்­பட்ட நிலையில் மீண்டும் இக்­க­ரும்புச் செய்­கையை தமிழ் மக்­களின் வாழிட பகு­திக்கு கொண்டு வரு­வது தமிழ் மக்­களின் எதிர்­கா­லத்தை பாதிக்கச் செய்யும் நோக்­க­மாகும்.

எனவே இத்­திட்­டத்தை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அமுல்­ப­டுத்த அனு­ம­திக்க முடி­யாது. மாவட்ட அபி­வி­ருத்திக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இச்­செ­யற்­பாடு சார்­பாக ஆராய்­வ­தற்கு இணைத்துக் கொள்­ளு­மாறு கேட்டுக்கொள்­கின்றேன் என குறிப்­பி­ட்­டுள்ளார்.

இக் கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லா கம, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி.அனுர தர்மதாஸ, செங்கலடி பிரதேச செய லாளர் ந.வில்வரெட்ணம் ஆகியோரு க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41