சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது உங்கள் தடுத்தாடும் திறனை நம்புங்கள் என தென்னாபிரிக்க அணியின் தலைவர் டு பிளசிஸ் தனது துடுப்பாட்ட வீரர்களிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்

இரு அணிகளிற்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் நாளை  எஸ்எஸ்சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முதல் டெஸ்டில் நாங்கள் எங்கள் தடுத்தாடும் திறன் மீது நம்பிக்கை வைக்கவில்லை அதுவே எங்கள் தோல்விக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாடுவதற்கு முக்கியமான விடயம் உங்கள் தடுத்தாடும் திறனை நம்புவதாகவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களிற்கு நெருக்கடியை கொடுக்க முயலவேண்டும் எங்கள் அணிவீரர்கள் இரண்டாவது டெஸ்டிற்கான தங்கள் உத்தி குறித்து கடுமையாக பயிற்சி எடுத்தனர் அவர்கள் சாதகமான மனோநிலையில் இருக்க விரும்புகின்றனர் எனவும் டு பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

தடுத்தாடும் திறனை நம்புவதே முதல் டெஸ்டில் இரு அணிகளிற்கும் இடையிலான முக்கிய வித்தியாசமாக காணப்பட்டது  எனவும் தெரிவித்துள்ள அவர் திமுத் கருணாரட்ன  அதிகம் ஆபத்தில்லாமல் விளையாடுவார்  அடித்து ஆடமாட்டார் சிறந்த முறையில் தடுத்தாடினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணி சுழற்பந்துவீச்சை அவ்வளவு மோசமாக விளையாடுவதில்லை எங்களிற்கு அது உளரீதியான சவாலும் இல்லை  காலியில் நாங்கள் அவதானமில்லாமல் விளையாடினோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.