இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் தீபிகஉடகமவிற்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்கள் குறித்து இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணையகம் இலங்கையின் அரசமைப்பிறகு ஏற்ப சுயாதீனமாக செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆணையகத்தின் தலைவரை பகிரங்கமாக அச்சுறுத்துவதும் அதனை ஊடகங்களில் வெளியிடுவதும் பாரதூரமான விடயம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரினதும் ஆணையாளர்களினதும் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பபட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் பொலிஸாரை விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.