அணித்தலைவர் தினேஸ் சந்திமல் மற்றும் பயிற்றுவிப்பாளர் சண்டிகஹதுருசிங்க ஆகியோருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் இன்னமும் அணியின் முக்கியபகுதியாகவுள்ளனர் என

ரங்கனஹேரத்   தெரிவித்துள்ளார்.

ஐசிசி தடையை இருவரும் எதிர்கொண்டுள்ள நிலையிலேயே ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் அணித்தலைவரோ அல்லது பயிற்றுவிப்பாளரோ இல்லாத நிலையில் உள்ளோம் என்பது உண்மை ஆனால் வலைப்பயிற்சிகளில் அவர்கள் கலந்துகொண்டனர் என தெரிவித்துள்ள ஹெரத் நாங்கள் சிறந்த முறையில் தயாராகியுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இல்லாமல் எங்களால் வெகுதூரம் பயணிக்க முடியாது போட்டிகளின் போது மாத்திரம் அவர்கள் எங்களுடன் இருக்கமாட்டார்கள் அவர்கள் எங்கள் பின்னால் இருக்கின்றார்கள் எனவும் ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி தடையின் அடிப்படையில் சந்திமல் ஓய்வறையில் தங்கியிருக்கலாம் ஆனால் மைதானத்திற்குள் அவர் செல்ல முடியாது, என்பது குறிப்பிடத்தக்கது.