முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு

Published By: Digital Desk 4

19 Jul, 2018 | 08:42 PM
image

முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் சில இன்றும்  மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார். இதன்போது கிணற்றுக்குள் அபயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்தி பகுதியில் நிலைகொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு கடற்படை உயர் அதிகாரி விக்ரம்சிங்க(  தலைமையில் நேற்று  அந்தப்பகுதிக்கு சென்ற பொலிஸாரும் கடற்படையின் விசேட இராணுவ அணியினரும் அகழ்வு பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய பசீலன் 2000 ஆட்லறி செல் இரண்டு உள்ளிட்ட இராணுவ வெடிபொருட்கள் சில மீட்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அகழ்வு பணி நேற்று பிற்பகல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் இன்றும்  தொடர்ந்து இடம்பெற்றது  என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அகழ்வுப்பணி நீதிமன்றத்தின் அனுமதியுடன் நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றும் இயந்திர வலு போதாமையால் இன்றும் குறித்த அகழ்வுப்பணி நிறுத்தப்பட்டு நாளை மீண்டும் இடம்பெறவுள்ளது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01