மகசின்சிறையில் 75 அரசியல் கைதிகள் இன்று அடையாள உண்ணாவிரதப்போராட்டம்

Published By: Raam

29 Feb, 2016 | 08:35 AM
image

சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்­து­வரும் தமிழ் அர­சியல் கைதி­களின் கோரிக்­கை­களை ஏற்­றுக்­கொள்­ளக்­கோ­ரியும் அப்­போ­ராட்­டத்தை வலுப்­ப­டுத்தும் வகை­யிலும் மகசின் சிறைச்­சா­லையில் உள்ள 75 தமிழ் அர­சியல் கைதி­களும் ஒருநாள் அடை­யாள உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை இன்­றைய தினம் முன்­னெ­டுக்­க­வுள்­ளனர்.

அநு­ர­ாத­புரம் சிறைச்­சா­லையில் நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணை­யின்றி தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் அர­சியல் கைதி­க­ளான யாழ்.கர­வெட்டி வடக்கு கர­ண­வாயைச் சேர்ந்த மதி­ய­ரசன் சுலக்சன், நாவ­லப்­பிட்டி மக்­கும்­ப­ரவைச் சேர்ந்த கணேசன் சந்­திரன் ஆகிய இரு­வரும் கடந்த திங்­கட்­கி­ழமை முதல் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­தினை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

ஆறா­வது நாளா­கவும் அவர்கள் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்த நிலையில் இன்று திங்­கட்­கி­ழமை அவர்­க­ளது வழக்கு விசா­ரணை வவு­னியா நீதி­மன்­றத்தின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­மென சட்­டமா அதிபர் திணைக்­களம் உரிய அதி­கா­ரி­களின் மூலம் அறி­வித்­தி­ருந்­த­தை­ய­டுத்து நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை தமது போராட்­டத்தை இடை­நி­றுத்­தி­யி­ருப்­ப­தாக அறி­வித்­தனர். அத­னை­ய­டுத்து அவர்­களை மீண்டும் சாதா­ரண கைதிகள் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் பிரி­விற்கும் மாற்­றப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் கடந்த செவ்­வாய்­க் கி­ழமை முதல் மகசின் சிறைச்­சா­லையின் ஜே பிரிவில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் பெண்­ணொ­ருவர் உட்­பட 14 தமிழ் அர­சியல் கைதிகள் தமது உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை நேற்று ஆறா­வது நாளா­கவும் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

உடல்­நிலை மோச­ம­டைந்­தி­ருக்கும் கைதிகள் வைத்­தி­யர்­களின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­களின் பின்னர் மீண்டும் சிறைக்­கூ­டங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் எவ்­வா­றா­யினும் தமது கோரிக்­கைகள் தொடர்­பாக உரிய பதில் கிடைக்­காத வரையில் தமது போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்­லை­யென்­பதில் உறு­தி­யா­க­வி­ருப்­ப­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

அதே­நேரம் அவர்களின் போராட்டத்தினை வலுப்படுத்தும் வகையிலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 தமிழ் அரசியல் கைதிகள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் இன்று ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47