இந்தியா, ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் அப்துல் கலாமின் சிலை செதுக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் ஏபிஜே அப்துல் கலாம். 

இந்தியாவில் எத்தனையோ குடியரசுத் தலைவர் வந்தாலும் அப்துல் கலாலுக்கு தனிப்பெருமை உண்டு என்பது யாவரும் அறிந்ததே.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தனது கடின முயற்சியால் நாட்டின் மிகப் பெரிய பதவியை வகித்த இவர், அனைவராலும் கடவுளிற்கு நிகராக போற்றப்படுகிறார் என்றால் அது மிகையாகாது. 

கடந்த 2015-ஆம் ஆண்டு அவர் இறந்த போது முழு உலகமே கவலையில் ஆழ்ந்தது. இப்போதும் அப்துல் கலாமின் அறிவுறுத்தல்களை பின்பற்றும் ஏராளமான இளைஞர்கள் எம்மில் உள்ளனர் என்றே கூறலாம்.

இவ்வாறு, ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் அப்துல் கலாமின் சிலை செதுக்கப்பட்டிருப்பது குறித்து கிரிக்கெட் வீரர் முகமது கைப் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அத்தோடு, பொதுவாக கோயில்களில் தெய்வங்களுக்கு தான் சிலைகள் செதுக்கப்படும். ஆனால் அப்துல் கலாமை தெய்வமாக நினைத்து தற்போது கோயிலில் சிலை செதுக்கியுள்ளனர். இதன்மூலம் அவர் மீது மக்கள் வைத்திருந்த அளவுக்கடந்த அன்பு வெளிப்படுகிறது என்றார்.