அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றத்தால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டில் பெர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன  ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது