முல்லைத்தீவு - மூங்கிலாறு பகுதியில் காடுகளை அழிக்கப்படுவது தொடர்பில் பிரதேச செயலகத்தினால் எந்தவித அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்றும் இவ்வாறு காடழிக்கப்படுவது தொடர்பில் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டத்திற்கு அருகில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டுகாணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதாவது மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டத்தை அண்மித்த பகுதியில் பயிர்செய்யக்கூடிய பெருமளவான நிலப்பரப்புக்கள் பெரும் காடுகளாக காணப்படுகின்றன.

இவ்வாறு தொழில் வாய்ப்புக்கள் எதுவுமின்றி தமக்கு வழங்கப்பட்ட அரை ஏக்கர் காணிகளில் எந்தவித வாழ்வாதாரப்பயிர்ச் செய்கைகளையும் மேற்கொள்ளமுடியாதுள்ளதாகவும் மேற்படி பகுதியில் தமக்கு வயல் காணிகளை வழங்குமாறும் தாங்கள் தொடர்ச்சியாக கோரிவருவதாகவும்  தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

தங்களுக்கான காணிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் இந்த பகுதிகளில் காடுகளுக்குள் சென்று விறகுகளை வெட்டுவதற்கோ அல்லது காடுகளுக்கு செல்வதற்கோ வனவள திணைக்கள அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்றும் அவ்வாறு சென்ற பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்ட பிரதேச மக்கள் தற்போது இப்பகுதியில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த பெரியமரங்கள் காடுகள் என்பன அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்  ஒருவரின் துணையுடன் அவரது உறவினர்களாலும் சில அரச அதிகாரிகளாலும் இவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் கிராம மட்ட அமைப்புக்கள் என்ற அடிப்படையில் தாங்கள் இவற்றை தட்டிக்கேட்க முற்படும் போது பொலிஸாரைக் கொண்டு தம்மை அச்சுறுத்துவதாகவும் பிரதேச பொதுமக்களும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வாறு காடுகள் அழிக்கப்படுவது தொடர்பில்  தனக்கு முறைப்பாடுகள்  கிடைக்கப்பெற்றுள்ளது இதனையடுதது அந்தப்பகுதிக்கு பொறுப்பான கிராமஅலுவலர் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவஇடத்திற்கு  சென்று இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிட்டுள்ளனர்.

அத்துடன்  நேற்று கிராம அலுவலர் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர் ஆகியோரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுபதிவு செய்யப்பட்டுள்ளதுடள் இவ்வாறு காடுகள் அழிக்கப்படுவதற்கு பிரதேச செயலகத்தினால் எந்தவித அனுமதிகளும் இதுவரைவழங்கப்படவில்லை என்;றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.