(நா.தனுஜா)

போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்குள் தான் இருக்கின்றார்கள். அவர்களை இனங்கண்டு தண்டிப்பதை விடுத்து பொதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் அமைப்பாளர் வண பிதா சக்திவேல் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குவதை ஒரு மதத்தலைவராகவும் ஒரு மனிதனாகவும் எதிர்க்கின்றேன். உயிரைக் கொல்வது கத்தோலிக்க சமயத்திற்கும் திருமறைக்கும் விரோதமானதாகும். ஒரு உயிரை கொல்லும் உரிமை எவருக்கும் இல்லை என்பதோடு குற்றம் புரிந்தவனுக்கும் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றே திருமறை போதிக்கின்றது.

தற்போது போதைப்பொருள் குற்றவாளிகள் எல்லோரும் அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கின்றார்கள். இது அனைவரும் அறிந்த விடயமாகும். அவர்களை இனங்கண்டு தண்டிப்பதை விடுத்து போதைப்பொருள் குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் எனக் கோருவது ஏற்க்க முடியாத விடயம் என்றார்.