மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள மரப்பாலம் எனுமிடத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதி வேகமாகச் சென்ற டிப்பர் வாகனமொன்று மூதாட்டி மீது மோதியதில் அம்மூதாட்டி ஸ்தலத்திலேயே உயிரிழந்து விட்டதாக  கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் மரப்பாலததைச் சேர்ந்த 72 வயதான துரைச்சாமி தானி எனும் வயோதிபப் பெண் ஆவார்.

உயிரிழந்தவரின் உடல் உடற் கூறாய்வு பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனச் சாரதி தப்பியோடிய போது பொது மக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.