யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவான ‘பேய் பசி’ படத்தின் ஓடியோ வெளியானது. 

ரைஸ்ஈஸ்ட் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சாகர் தயாரித்திருக்கும் திரைப்படம் “பேய் பசி” இதில் யுவனின் சகோதரர் ஹரிகிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் கருணாகரன்,டேனியல் பாலாஜி, அம்ருதா, ராமசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,“ஒரு ஷொப்பிங் மாலில்” நாயகன் மற்றும் நாயகி மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு இரவில் அவர்களுக்கு அங்கு நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களே படத்தின் திரைக்கதை. இதில் பேய் இல்லை. ஆனால் திரில்லிங்கான சம்பவங்கள் இருக்கிறது. இது ரசிகர்களை ஈர்க்கும்.’ என்றார்.

குறித்த படத்தின் ஓடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன். ஸ்ரீகாந்த் தேவா, இயக்குநர்கள் நலன் குமாரசுவாமி, வெங்கட்பிரபு, கிருத்திகா உதயநிதி, தயாரிப்பாளர் காரகட்ட பிரசாத் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர். விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல்களை வெளியிட்டார்.