(எம்.எம். சில்வெஸ்டர்)

இலங்கை  கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நவீட் நவாஸ், 19 வயதுக்குபட்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் வரை நவீட் நவாஸ் தலைமை பயிற்றுநாக நவீட் நவாஸ் செயற்படவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நவீட் நவாஸ், 2009 ஆம் ஆண்டு, 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநராக செயற்பட்டுள்ளதுடன், இலங்கை ஏ  கிரிக்கெட் அணிக்கும் மற்றும் இலங்கை மகளிர் அணிக்கும் பயிற்றுநராக செயற்பட்டுள்ளார்.

நியூஸிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில், அவுஸ்திரேலியாவின் டேமியன் ரைட்டினால் பயிற்றப்பட்ட இவ்வணி, ஆறாம் இடத்தைப் பெற்றது. நவீட் நவாஸின் பயிற்றுவிப்பின் கீழ்  19 வயதுக்குட்டபட்ட உலகக் கிண்ண போட்டிகளில் சிறந்த இடத்தை எட்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை  எதிர்பார்த்துள்ளது.