(இரோஷா வேலு) 

துப்பாக்கியொன்று மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி ரவைகளுடன் இன்று யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து இளைஞராெருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதொகல பிரதேசத்தில் வைத்து துப்பாக்கி மற்றும் அதன் ரவைகளுடன் இளைஞரொருவர் இன்று  அதிகாலை 2.50 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவத்தில் வதொகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து துப்பாக்கியொன்று மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி ரவைகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.