உத்தரகாண்ட் மாநில பள்ளத்தாக்கில் பஸ் குடைசாய்ந்ததில்  10 பேர்  உயிரிழந்துள்ளனர். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியிலிருந்து ஹரித்வார் நோக்கி அரச சேவை பஸ் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

குறித்த பஸ் திஹ்ரி மாவட்டத்தின் சூர்யதார் பகுதியில் ரிஷிகேஷ் - கங்கோத்ரி நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் பஸ் குடைசாய்ந்தது. குறித்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு திஹ்ரி மாவட்ட பேரிடர் மீட்புக்குழு மற்றும் சம்பா மாவட்ட மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்கள மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு 2 இலட்சம்  ரூபா , படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா வழங்க  உத்தரவிட்டுள்ளது.