கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து பிரிவினை அமைப்பதற்கு 450 மில்லியன் ரூபாநிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்களின் மருத்துவ தேவைகளை நிறைவு செய்யும் ஒரேயொரு வைத்தியசாலையாக காணப்படும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையானது பல்வேறு  தேவைப்பாடுகள் கொண்ட வைத்தியசாலையாக காணப்படுகின்றது.

இதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து பிரிவினை அமைப்பதற்கு 450 மில்லியன் ரூபாநிதி தேவையென வைத்திய சாலை நிர்வாகத்தினர் மதிப்பீடு செய்து அதற்கான கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர்.