துருக்கியில் கடந்த இரண்டு வருட காலமாக அமுலில் இருந்த அவசரகாலநிலைமை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து துருக்கியில் அவசரகாலநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. அவசரகால நிலைமை பிரகடணப்படுத்தப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டதோடு பதவியிலிருந்தும் நீக்கப்பட்டனர். 

இந்நிலையில் துருக்கியின் ஜனாதிபதியாக தையீப் எர்டோகன் மீண்டும் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அவசரகால நிலையை நீக்குவதாக வாக்குறுதியளித்திருந்ததைப் போல இன்று நிறைவேற்றியுமுள்ளார்.

துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரத்தில் சிக்கி சுமார் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.