தனது பின்னழகை மேம்படுத்துவதற்காக சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக பலியான நிலையில் பின்னழகை மேம்படுத்த பிளாஸ்ரிக் சத்திர சிகிக்சை செய்த பிரபல வைத்திய நிபுணர் தலைமறைவாகியுள்ளனார்.

இந்த துயரச் சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.

வெளிநாடுகளில் பெண்கள் தங்களது உடல் அழகை மேம்படுத்த பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மேற்கொள்வது வழக்கமானதொன்றாகவுள்ளது. 

பிரேசிலைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டானிஸ் பர்டாடோ  என்பவர் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையில் சிறந்து விளங்கியதால், அவரிடம் சிகிச்சை பெற பல பெண்கள் வரிசையில் காத்திருப்பார்கள். 

இந்நிலையில் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான டேனிஸ்க்கு சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கிலும் பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகமாகும். 

இந்நிலையில், 46 வயதுடைய பெண் ஒருவர் தனது பின்னழகை பெரிதாக்க டேனிஸிடம் சிகிச்சை பெறச் சென்றுள்ளார். இதையடுத்து குறித்த பெண்ணுக்கு வைத்திய நிபுணரான டேனிஸ் சில ஊசிகளை ஏற்றியுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த பெண் உயிரிழந்துள்ளார். 

சிகிச்சையின் போது பெண் உயிரிழந்த நிலையில் வைத்திய நிபுணரான டேனிஸ் ஊரை விட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த வைத்திய நிபுணரை பொலிஸார் வலைவிரித்து தீவிரமாக தேடி வருகின்றனர். பெண் உயிரிழந்த நிலையில் அவரிடம் சிகிச்சைக்காக காத்திருக்கும் ஏனையோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.