குழந்தைகளுக்கான Atrial Septal Defect பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Daya

19 Jul, 2018 | 09:01 AM
image

குழந்தைகளுக்கான Atrial Septal Defect பாதிப்பிற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி விளக்கம் தருகிறார் வைத்தியர் முத்துக்குமரன்.  

சில குழந்தைகள் பிறக்கும் போதே Atrial Septal Defect என்ற பாதிப்புடன் பிறக்கும்.  அதாவது இதயப்பகுதியில் ஓட்டை என்று குறிப்பிடுகிறோமல்லவா அது போன்ற பாதிப்புடன் பிறந்துவிடும். இதில் ஒரு சில பிள்ளைகள் வளர வளர குறித்த பாதிப்பு தானாகவே மறைந்துவிடும். ஒரு சில குழந்தைகளுக்குத்தான் இத்தகைய பாதிப்பு மறையாமல் அப்படியே இருக்கும். 

இவர்களுக்கு இதயத்தின் மூலம் நடைபெறும் இரத்தவோட்டம் குறைவான எல்லையில் மட்டுமே நிகழும். அதாவது ஓக்ஸிஜன் நிரம்பிய குருதி அல்லது ஓக்ஜிஜன் குறைவான குருதி என இரண்டில் ஒன்று இதயம் மற்றும் நுரையீரலுக்குள்ளேயே சுற்றி வரத் தொடங்கும். 

இதன் காரணமாக அந்த குழந்தையின் வளர்ச்சி மிக குறைவாகவே இருக்கும். ஒல்லியாகவே இருப்பார்கள். தன் வயதையொத்த பிள்ளைகளுடன் ஓடியாடி விளையாட இயலாது. எளிதில் சோர்வடைந்துவிடுவார்கள். மாடிப்படி ஏற முடியாது. சிறிது தூரம் நடந்தால் மூச்சிரைப்பு ஏற்படும். மார்பகத்தின் வடிவமே கூம்பு வடிவமானதாக இருக்கும். உறங்கும் போது கூட மூச்சிரைப்பு ஏற்படக்கூடும். 

இத்தகைய பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு முதலில் வைத்தியர்கள் 2 டி எக்கோ என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள். இதன் மூலம் இதயத்தின் எந்த பகுதியில் ஓட்டை ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக கண்டறியலாம். 

ஓட்டையை அளவைப் பொறுத்து சத்திர சிகிச்சை செய்து கொள்ளவேண்டும். ஒரு சில பிள்ளைகளுக்கு சத்திர சிகிச்சை இல்லாமல் அந்த ஓட்டையை அடைத்துவிட இயலும். 

அதே போல் இத்தகைய பாதிப்பின் அளவு அதிகமாக இருந்தால், அந்த பிள்ளைக்கு மூன்று முதல் ஐந்து வயதிற்குள்ளாகவே இத்தகைய சத்திர சிகிச்சையை மேற்கொண்டால், அதன் பிறகு அவர்களின் வளர்ச்சி இயல்பானதாகயிருக்கும். 

ஒரு சில குழந்தைகளுக்கு P D A மற்றும் V H D போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கும் சத்திர சிகிச்சை மூலம் தீர்வு காண்பது சரியானது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29