ஐரோப்பிய ஒன்றியமானது கூகுள் இணையத்தள நிறுவன அன்ரொயிட் செயற்பாட்டு முறைமை தொடர்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தண்டப் பணத்தை விதித்துள்ளது. 

மூன்று வருட கால விசாரணையொன்று கூகுள் நிறுவனத்தின் நடமாடும் உபகரண தந்திரோபாயமானது நியாயமற்ற முறையில் அதனது தேடுதல் செல்வாக்கினை பயன்படுத்தியுள்ளதாக உரிமை கோரியததைத் தொடர்ந்தே ஐரோப்பிய ஆணையகம் மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பத்திரிகை மாநாடொன்றில்  விளக்கமளிக்கப்படவுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தனியொரு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அதிகூடிய பணத்தொகையாக கருதப்படுகிறது.

இந் நிலையில் இது தொடர்பில் கூகுள் சட்டரீதியாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.