ஹெய்ட்டியில் பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட படையினர் விசாரிக்கப்பட்டார்களா?

Published By: Rajeeban

18 Jul, 2018 | 05:11 PM
image

சுமார் பத்து வருடங்களிற்கு முன்னர் ஹெய்ட்டியில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த விபரங்களை கோரும் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் மனுவிற்கு இலங்கை வெளிப்படையான பதிலை வழங்கவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஹெய்ட்டில் ஐநா அமைதிப்படையில் பணியாற்றியவேளை சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட படையினரிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் தகவலறியும் உரிமை மூலம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிதிட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கருத்து வெளியிட்டுள்ளார்.

சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பின்னர் ஹெய்ட்டியிலிருந்து திருப்பி அனுப்பபட்ட 134 இலங்கை படையினருக்கும் என்ன நடந்தது அவர்கள் மீதான விசாரணைகள் எவ்வாறு இடம்பெற்றன என்பது போன்ற விடயங்கள் குறித்து இலங்கை வெளி;ப்படையாக பதில் அளிக்கவேண்டும் என யஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுவர்களை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்த படையினர் குறித்த குற்றவியல் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் வெளிப்படை தன்மை பின்பற்றப்படுகின்றதா என்ற விடயத்தில் இராணுவம் தேசிய பாதுகாப்பு குறித்த வாதங்களின் பின்னால்  ஒளிந்துகொள்ள முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றங்கள் இழைக்கப்பட்டதை விட  வெளிப்படைதன்மையினால் நாட்டின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என  பாதுகாப்பு அமைச்சு வாதிடுவது வேடிக்கையானது என குறிப்பிட்டுள்ள ஜஸ்மின் சூக்கா இரகசியதன்மையே நாட்டின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58