எதிர்பார்த்த தீர்வு கிடைக்காமையால் மக்கள் விரக்தியிலுள்ளனர் - சம்பந்தன்

Published By: Priyatharshan

18 Jul, 2018 | 04:08 PM
image

தமது பிரச்சினைகளுக்கு தாம் எதிர்பார்த்த உடனடி நிவாரணங்கள் கிடைக்காமையால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். மக்கள் பரம்பரை பரம்பரையாக  வாழ்ந்த நிலங்களை ஆயுத படையினர் கைவசப்படுத்தி வைத்துள்ளதனையும் இவற்றினை விடுவிப்பது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிக மந்த கதியில் இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள பெல்ஜியம் - இலங்கை பாராளுமன்ற நட்புறவு குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போதே எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் யாப்பானது எல்லோரினதும் இணக்கப்பாட்டுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பதனை சுட்டிக்காட்டிய அதேவேளை, நாட்டின் பன்முகத்தன்மையையும் பல இனங்களையும் அங்கீகரிக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான முயற்சிகள் இடம்பெற்று ஒரு வரைபு யாப்பானது வழிநடத்தல் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதனையும் எடுத்துக் காட்டினார். 

மேலும் இந்த முயற்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதனையும் நீண்டகாலமாக தொடரும் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை எட்டும் முகமாக நிலவும் சூழ்நிலைமையை சாதகமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்திக் கூறினார்.

இந்த நாட்டினை ஒரு புதிய பாதையில் கொண்டுசெல்லும் நோக்கில் புதிய அரசியல் யாப்பானது இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன்,  இந்நாட்டினை முன்னேற்றமான பாதையில் இட்டு செல்வதா? அல்லது மீண்டும் பின்னோக்கி நகர்த்துவதா? என்பதே இன்றுள்ள தெரிவுகளாகும், நாட்டினை முன்னேற்றமான ஒரு பாதையில் இட்டு செல்ல வேண்டுமேயாகில் ஒரு புதிய அரசியல் யாப்பினை நிறைவேற்றுவது இன்றியமையாததாகும் என்றும் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.

நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், தமது பிரச்சினைகளுக்கு தாம் எதிர்பார்த்த உடனடி நிவாரணங்கள் கிடைக்காமையால் மக்கள் விரக்தி அடைந்திருப்பதனையும், விசேடமாக மக்கள் பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலம் வாழ்ந்த நிலங்களை ஆயுத படையினர் கைவசப்படுத்தி வைத்துள்ளதனையும் இவற்றினை விடுவிப்பது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிக மந்த கதியில் இடம்பெறுவதனையும் எடுத்துக் கூறினார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், இவர்களின் உறவினர்கள் தொடர்ந்தும் தங்கள் அன்புக்குரியர்வர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஒரு நிலையற்ற நிர்க்கதி நிலைமையில் இருக்க முடியாது என்பதனையும் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்திய அதேவேளை எமது மக்கள் பல மாதங்களாக இந்த விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் இந்த விடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எமது எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வண்ணம் இல்லை எனவும் எடுத்துக்கூறினார்.

கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், நாட்டு மக்களுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்த கூடிய நடவடிக்கைகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55