மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் ஒருவரையொருவர் அனைத்தவாறு இரு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வளாகத்தில் நேற்று  மாலை மற்றும் இன்று காலை மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் தற்போது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது.

மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தை விரிவு படுத்தி அகழ்வு செய்யும் பணி இடம் பெற்று வருகின்றது.

நேற்று அகழ்வு பணிகள் இடம் பெற்ற புதிய இடத்திலும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது வரைக்கும் 40 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் 27 எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் பெண்கள் கைக்கு அணியக்கூடிய காப்பு என சந்தோகிக்கப்படுகின்ற தடயப் பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அருகருகே இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.