(நா.தினுஷா) 

தேர்தல் நடவடிக்கை தொடர்பாக சீன நிறுவனத்திடமிருந்து முன்னாள் ஜனாதிபதி பணம் பெற்றதாக நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் பதிலளிப்பதற்கு நாளைமறுதினம் தயாராகுமாறு இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரோ மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன நிறுவனத்திடமிருந்து 7.6 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொண்டதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்து வெளியிட்டிருந்தது. 

இதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் இது குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் விளக்கவுரை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந் நிலையில் குறித்த செய்தி தொடர்பான விவாதம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் பதிலளிக்க தயாராகுமாறு அஜித் பி. பெரேரா கேட்டுக் கொண்டார்.