கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக தான் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதிதேர்தல் வேட்பாளராக யாரையும் அறிவிக்கவில்லை

முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூர் சென்ற பின்னர்  இந்த அறிக்கையை சிலர்  திட்டமிட்டு சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவினதும் பொது எதிரணியினதும்  ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் போது அறிக்கை மூலம் அறிவிக்க மாட்டேன் நேரடியாக செய்தியாளர் மாநாட்டில் அறிவிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி தெரிவிக்க விரும்புகின்றார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் 2020 இல் நடைபெறப்போவதில்லை 2019லேயே ஜனாதிபதி தேர்தல் இடம்பெறப்போகின்றது,எங்கள் அரசமைப்பின்படி டிசம்பர் 9 2019 ற்கு முன்னர் தேர்தல் நடைபெறவேண்டும் என  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.