மிகவும் சூட்சுமமான முறையில் மலவாயிலில் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் தங்கத் துண்டுகளை கடத்திச்செல்ல முற்பட்ட இந்திய  பிரஜைகள் நால்வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 

குறித்த நபர்கள் இன்று அதிகாலை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு குறித்த தங்கத் துண்டுகளை கடத்திச்செல்ல முற்படுகையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களை சோதனை செய்த போது மலவாயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 தங்க துண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இந்தியாவின் தமிழகத்தை  சேர்ந்த 24, 32, 25, 26  வயதுடைய   நபர்களேன அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 15,33,415 இலட்சம் ரூபா பெறுமதியான 235.91 கிராம் நிறையுடைய 12 தங்க துண்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.