முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வறட்சியினால்  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உணவு உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டம் காலநிலை நிலவரத்தின்படி வறட்சியினால் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது. அதன்படி மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள 4 ஆயிரத்து 925 குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகம் பிரதேச சபைகளின் ஒத்துசைவுடன்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

அதேவளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்குகின்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் முதற் கட்டமாக 824 குடும்பங்களுக்கு உலர் உணவு விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 276 குடும்பங்களுக்கான உலர் உணவு  விநியோகமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் வவுனிக்குளம், முத்துஐயன்கட்டுக்குளம் ஆகியவற்றில் நீர் குறைவாகவுள்ளதனால் விவசாய நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.