தன்னுடைய மனைவியையும் மகனையும் கைதுசெய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகைக்கு, இன்று சென்றிருந்த அவர், அங்கு விசேட பூஜைவழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னரே மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ரக்பி விளையாட்டு வீரர் தாஜுதீனின் மரணம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ஷவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கைது செய்யப்படுவர் என வார இறுதி பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.